சிறகடிக்க ஆசை: விஜயா, ரோஹினியை எதிர்த்து பேச ஆரம்பித்த மீனா.. இனி தான் ஆட்டம் ஆரம்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் இதுவரை மீனா தனது தன்னை அவமானப்படுத்தும் விஜயா, ரோஹினியை எதிர்த்து பேசாமல் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தான் அவர் எதிர்த்து பேச ஆரம்பித்துள்ளார். இனிதான் ஆட்டம் ஆரம்பம் என இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மனோஜ்க்கு வேலை இல்லை என்று தெரிந்தவுடன் ரோகினி அவர் மீது கோபப்பட்டு தனது அம்மா ஊருக்கு செல்கிறார். அவரை மனோஜ் தேடி வரும்போது ரோஹினி ஒளிந்து கொள்கிறார். அதன்பிறகு மனோவின் நல்ல மனதை புரிந்து கொண்டு மீண்டும் ரோகிணி வீட்டுக்கு வர மீண்டும் முத்து - ரோஹினி இடையே பிரச்சனை வருகிறது என்பதோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
இன்றைய எபிசோடில் இன்டர்வியூக்கு மனோஜ் செல்லும்போது முத்து வழக்கம் போல் சில நக்கல் ஆன வார்த்தைகளை பேச, அதனால் கோபப்படும் ரோஹினி ‘டிரைவர் வேலை குறித்து இளக்காரமாக பேசுகிறார். அப்போது மீனா குறுக்கிட்டு, டிரைவர் வேலை ஒன்றும் மோசமான வேலை இல்லை, பொய் சொல்லி ஏமாற்றுவதை விட அது பெரியது தான் என்று கூற இதனால் ரோகிணி மற்றும் விஜயா அதிர்ச்சி அடைகின்றனர்.
இதுவரை விஜயா மற்றும் ரோஹினி என்ன பேசினாலும் அமைதியாக சகித்துக் கொண்டிருந்த மீனா, தற்போது அவர்களை எதிர்த்து பதில் அளிக்கிறார். மேலும் முத்துவை அடக்கி வை என மீனாவிடம் விஜயா சொல்லும்போது கூட, நான் எதற்காக அடக்கி வைக்க வேண்டும், நீங்கள் உங்கள் பிள்ளையை அடக்கி வையுங்கள், என்று பதிலடி கொடுக்கிறார். நீதானே அவனுக்கு கீ கொடுத்து பேச வைக்கிறாய் என்று விஜயா கூறியபோதிலும் மீனா பதிலடி கொடுக்கிறார்.
மேலும் என்னுடைய மரியாதை காப்பாற்றுவதற்காக என் புருஷன் எனக்கு பூக்கடை வைத்து கொடுத்து இருக்கிறார் மற்றவர்கள் புருஷன் போல் என்னை அவர் தலைகுனிய வைக்கவில்லை என ரோஹினியை மறைமுகமாக குத்தி காட்டுகிறார். மொத்தத்தில் இதுவரை அமைதியாக இருந்த மீனா, தற்போது விஜயா தன்னையோ, தனது கணவரையோ மட்டம் தட்டி பேசும்போது அதிரடியாக பதிலடி கொடுக்கிறார்.
மீனாவின் இந்த திடீர் மாற்றத்தால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடையும் விஜயா உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வழி பண்றேன்’ என்று கூறுவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
விஜயா ஒவ்வொரு முறையும் முத்து மற்றும் மீனாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை செய்ய அந்த பிரச்சனை ஒரு விதத்தில் முத்து - மீனாவுக்கு நன்மையாகத்தான் முடிந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து முத்து, மீனாவை வீட்டை விட்டு விரட்ட விஜயா சதி செய்வாரா? என்பதை பொறுத்தவரையில் தான் பார்க்க வேண்டும்.
இன்னொரு பக்கம் மனோஜ்க்கு வேலை இல்லை என்று பொய் சொன்னதற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சனை செய்தார் ரோஹினி. ஆனால் விஜயா பேரில் இருந்த பார்லரை விற்றதும், அதில் ரோஹினி வேலை தான் செய்கிறார் என்ற உண்மை தெரிய வந்தால் என்ன ஆகும்? அதுமட்டுமின்றி தனக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என்ற உண்மை குடும்பத்திற்கு தெரிந்தால் என்ன ஆகும்? என்பதை எல்லாம் வரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments