close
Choose your channels

16 வயது பள்ளி சிறுமிகள் போல் மீனாவும் அவரது தோழி நடிகையும்.. ரெட்டை ஜடையில் க்யூட் புகைப்படம்..!

Wednesday, July 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை மீனா மற்றும் அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான சங்கீதா கிரிஷ் ஆகிய இருவரும் 16 வயது பள்ளி சிறுமிகள் போல் ரெட்டை ஜடை போட்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் என பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் மீனா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கணவரின் மறைவிற்குப் பிறகு சோகத்தில் இருந்த மீனா தற்போது தான் ஓரளவு தேறி இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் சமீபத்தில் ஒரு மலையாள படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் மீனா, சற்றுமுன் அவர் தனது நெருங்கிய தோழியான சங்கீதாவுடன் இணைந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருவருமே ரெட்டை ஜடை போட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ‘16 வயது பள்ளி சிறுமிகள் போல் இருக்கிறீர்கள் என்றும் கியூட்டாக இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பு கூட இந்த புகைப்படங்களை பார்த்து ’எந்த பள்ளியில் நீங்கள் இருவரும் ஒன்றாக படிக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment