16 வயது பள்ளி சிறுமிகள் போல் மீனாவும் அவரது தோழி நடிகையும்.. ரெட்டை ஜடையில் க்யூட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Wednesday,July 24 2024]

நடிகை மீனா மற்றும் அவரது நெருங்கிய தோழியும் நடிகையுமான சங்கீதா கிரிஷ் ஆகிய இருவரும் 16 வயது பள்ளி சிறுமிகள் போல் ரெட்டை ஜடை போட்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார், அஜித், விஜய் என பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் மீனா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் கணவரின் மறைவிற்குப் பிறகு சோகத்தில் இருந்த மீனா தற்போது தான் ஓரளவு தேறி இயல்பு நிலைக்கு திரும்பி இருப்பதாகவும் சமீபத்தில் ஒரு மலையாள படத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமாக ஃபாலோயர்கள் வைத்திருக்கும் மீனா, சற்றுமுன் அவர் தனது நெருங்கிய தோழியான சங்கீதாவுடன் இணைந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இருவருமே ரெட்டை ஜடை போட்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் ‘16 வயது பள்ளி சிறுமிகள் போல் இருக்கிறீர்கள் என்றும் கியூட்டாக இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பு கூட இந்த புகைப்படங்களை பார்த்து ’எந்த பள்ளியில் நீங்கள் இருவரும் ஒன்றாக படிக்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

 

More News

LCU போல் PCU.. அஜித்தின் 3 படங்களை இயக்கும் ரூ.1000 கோடி வசூல் பட இயக்குனர்..!

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் போலவே பிரபல இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும் அவருடைய இயக்கத்தில் அஜித் தொடர்ச்சியாக மூன்று

ஆடி மாத சிறப்பு பலன்கள் - 12 ராசிகள்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்காக பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் அவர்கள் கணித்து வழங்கும் ஆடி மாத சிறப்பு பலன்கள் 12 ராசிகளுக்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

'கோட்' படத்தை அடுத்து ஏஜிஎஸ் தயாரிப்பது பான் இந்திய நடிகர் படமா?  பரபரப்பு தகவல்..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் அடுத்ததாக பான் இந்திய நடிகரின் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி.. ஆனால் ஹீரோ யார் தெரியுமா?

ஒரே படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் நிலையில் அந்த படத்தில் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

பாடகி சின்மயியை டார்ச்சர் செய்த நடிகை சமந்தா.. கதறி அழுக என்ன காரணம் ? வீடியோ வைரல்..!

பாடகி சின்மயி மற்றும் நடிகை சமந்தா இருவரும் நெருங்கிய தோழிகள் என்ற நிலையில் பாடகி சின்மயி தன்னை சமந்தா டார்ச்சர் செய்வதாக கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.