ஓபிஎஸ்-க்கு திடீர் உடல்நலக்குறைவு. மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட நிலையில் நேற்று இரவு முழுவதும் அவர் உறங்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட ஓபிஎஸ் அவர்கள் இன்று காலை 8.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு தூக்கமின்மை காரணமாகவும், சோர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டதாகவும், அவரது உடல்நலக்குறைவுக்கு நீண்ட நேரம் தூங்காமல் இருந்த சோர்வுதான் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

இதனால் மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப செய்தியாளர் சந்திப்பு ஒருசில மணி நேரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

தனித்து நின்றால் ஓபிஎஸ் ஜெயிக்க முடியுமா? சி.ஆர்.சரஸ்வதி

நேற்று இரவு முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த சி.ஆர்.சரஸ்வதி, 'கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அம்மாவின் நினைவிடத்தில் தியானம் செய்வதாக கூறினார்...

ஓபிஎஸ் பேட்டிக்கு ஆதரவு கொடுத்த பிரபலங்கள் யார் யார்?

'சாது மிரண்டால் காடு தாங்காது' என்ற பழமொழிக்கேற்ப தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் சமாதி அருகே கொடுத்த பேட்டி தமிழக அரசியல் சரித்திரத்தில் இடம்பெறும் ஒருநாளாக அமைந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் அவர் கலைத்த மெளனம் புயலாக மாறி தமிழக அரசியல் வட்டாரங்களை சுழன்றடித்து வருகிறது. இனிவரும் ஒருசில நாட்கள் Ī

தமிழக ஆளுனரின் சென்னை வருகை திடீர் ரத்தா?

தமிழக முதல்வராக இன்று அல்லது நாளை சசிகலா பொறுப்பேற்கும் வகையில் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுனர்  வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே ஆளுனரின் மும்பை நிகழ்ச்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டது...

மருத்துவமனையில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த 75 நாட்களில் அனைத்து நாட்களிலும் இப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். ஆனால் ஒருநாள்கூட அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

10 சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். ஓபிஎஸ். மீதியை எப்போது சொல்வார்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்...