கடும் கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு: மருத்துவர் குழு பரிந்துரை
- IndiaGlitz, [Saturday,May 22 2021]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இரண்டு வார ஊரடங்கு நாளை மறுநாள் உடன் முடிவுக்கு வருவதை அடுத்து இந்த ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்து வருகிறார்
இந்த ஆலோசனையின் போது அவர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் உச்சம் பெறும் என மருத்துவ நிபுணர்கள் கூறி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமென்றும் கடுமையான கட்டுப்பாடுகளையும் விதிக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன
தற்போது அளிக்கப்பட்டிருக்கும் தளர்வுகள் காரணமாக ஊரடங்கின் நோக்கமே நிறைவேறவில்லை என்றும் அதனால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது உள்ள ஒருசில தளர்வுகள் நீக்கப்பட்டு மேலும் சில கடுமையான கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் இரண்டு வாரங்கள் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.