இயந்திரம் மூலம் மனிதக்கழிவு அகற்றுதல்: தமிழகத்தில் அறிமுகம் செய்த உதயநிதி!
- IndiaGlitz, [Monday,June 21 2021]
கடந்த பல ஆண்டுகளாக மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு பதிலாக இயந்திரங்கள் மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் முறையை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் முதல்முறையாக மனித கழிவுகளை இயந்திரம் மூலம் அகற்றும் முறையை சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செயல்முறைபடுத்தியுள்ளார்.
மனித கழிவுகளை இயந்திரத்தை கொண்டும் அகற்றும் முறை முதல்முறையாக சேப்பாக்கம் தொகுதியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம்’என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே இதுகுறித்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த வாக்குறுதி சேப்பாக்கம் தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. படிப்படியாக தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் இயந்திர முறையில் மனிதக்கழிவுகளை அகற்றும் முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றுவதை ஒழிப்போமென தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். இதன்படி எனது முன்னெடுப்பில் எந்திரத்தைக் கொண்டு கழிவை அகற்றும் முறையை முதன்முறையாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்து, கொய்யாத்தோப்பு பகுதியில் அதன் செயல்பாட்டை துவக்கி வைத்தோம். pic.twitter.com/p6cbktKLBF
— Udhay (@Udhaystalin) June 20, 2021