'பிகில்' படத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய வியாபாரிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் அவர்களின் இசையமைப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், சிங்கிள் பாடல் ரிலீஸ், இசை வெளியீட்டு விழா என புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் டீஸர், டிரைலர் ஆகியவை விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் படக்குழுவினர் செய்யும் பிரமோஷன் மட்டுமின்றி ஒருசில அரசியல்வாதிகளும் இந்த படத்திற்கு கடந்த சில நாட்களாக இலவச விளம்பரம் செய்து வருகின்றனர். இதனையடுத்து தற்போது இந்த பணியை வியாபாரிகளும் கையில் எடுத்துள்ளனர். விஜய் நடித்த 'பிகில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சி வெட்டும் முட்டுக்கட்டை மீது செருப்பு காலை விஜய் வைத்துள்ளதாகவும், இந்த போஸ்டர் தங்களது தொழிலை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். மேலும் 'பிகில்' படத்தின் போஸ்டரையும் கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆனால் இந்த எதிர்ப்புகளை கண்டுகொள்ளாமல் 'பிகில்' படக்குழுவினர் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் விஜய் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout