மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள்!!!

  • IndiaGlitz, [Monday,September 14 2020]

 

தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புகள் தொடர்ந்து வலுத்து வருகிறது. இதனால் தமிழக அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அக்கறையோடு செயல்பட வில்லை எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒருபோதும் தமிழக அரசு (இப்போதைய ஆளும் கட்சி) நீட் தேர்வை விரும்பவில்லை என்று தமிழக அரசு சார்பில் தொடர்ந்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வினை கடந்த 2016-17 ஆம் ஆண்டு முதன்முதலில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதாக அவர்கள் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கிக் கொடுத்தார். எனவே இந்தியா முழுக்க நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டபோதும் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு இத்தேர்வை ஒப்புக்கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதைத்தவிர கடந்த 2017 பிப்ரவரியில் தமிழ்நாட்டை நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்குவதற்கு இரண்டு மசோதாக்களையும் அதிமுக (தமிழக அரசு) அறிமுகப்படுத்தியது. அது ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காகவும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையில் நீட் தேர்வு 2017 இல் நடந்து முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தேர்வில் கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சிறப்புத் திட்டத்தையும் தமிழக அரசு கொண்டுவந்தது.

இதற்காக 2017-18 ஆம் ஆண்டில் தமிழகத்தின் State board மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதையும் நீதிமன்றம் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் ஒரு வருடத்திற்கு நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெற Ordinanace கொண்டுவரவும் தமிழக அரசு முயற்சித்தது. இந்த முயற்சியின்போது எதிர்த்தரப்பினரே (இப்போது நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறும்) சிலரே நீட் தேர்வு முக்கியம் என நீதிமன்றத்தில் வாதாடி முயற்சியை வீணடித்தனர் எனத் தற்போது தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நீட் தேர்வுக்கு முழுக்க முழுக்க தற்போதைய ஆளும் அரசே காரணம் எனவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தவறானது கருத்து என்பதை தமிழக அரசு சார்பில் சுட்டிக் காட்டியதோடு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படும் அரசாகவே தமிழக அரசு இருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

More News

ஐபிஎல் திருவிழா ஸ்பெஷல் டிரைலர் மாறுமா டெல்லியின் மோசமான ராசி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் மோசமான சாதனைகளைக் கொண்ட  அணி டெல்லி கேபிடல்ஸ் அணியாகும்.

குப்புறப் படுக்க வைத்தால் கொரோனா நோயாளியைக் காப்பாற்ற முடியுமா??? புதுத்தகவல்!!!

கொரோனா நோய்க்கான சிகிச்சை குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் பல புதுப்புது தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

நீட் அறிக்கையை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த டுவீட்!

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நேற்று முன்தினம் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியான நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடந்தது

சூர்யா உள்நோக்கத்துடன் பேசியிருக்க மாட்டார்: ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து

நீட் தேர்வு குறித்து அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும் நேற்று சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

சுந்தர் சியின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோக்கள்: படப்பிடிப்பு இன்று ஆரம்பம்!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கி வரும் 'அரண்மனை 3' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது