close
Choose your channels

வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டாரா? வைரலாகும் வீடியோ

Monday, November 6, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பகுத்தறிவு கொள்கை கொண்டவர் என்றும், அவர் எந்த மதத்தையும் சாராதவர் என்றும் தான் தமிழக மக்கள் இன்று வரை நம்பிக்கொண்டிருக்கின்றார். ஆனால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வைகோ தனது குடும்பத்தினர்களுடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவரும் அவரது குடும்பத்தினர்களும் ஞானஸ்தானம் பெற்று, தவறாமல் சர்ச்சுக்கு சென்று வருவதாகவும் அந்த வீடியோவில் கூறப்படுகிறது.

நற்செய்தியாளர் ஒருவர் பேசும் இந்த வீடியோவில், 'வைகோ ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதால் அவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதை வெளிப்படையாக சொல்லாமல் இருப்பதாகவும் இருப்பினும் விரைவில் அவர் இதுகுறித்து வெளியே சொல்வார் என்றும் கூறியுள்ளார் 

மேலும் தினமும் இரண்டு முறை வைகோ பைபிள் வாசிப்பதாகவும், அவருக்கு ஜெபம் செய்வது எப்படி என்று தான் கற்று கொடுத்ததாகவும், அந்த நற்செய்தியாளர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவில் உள்ள வைகோவின் மகளும் மருமகனும் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் சர்ச்சுக்கு சென்று ஊழியம் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்

இந்த செய்திக்கு வைகோ என்ன விளக்கம் அளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment