கருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது செருப்பு வீச்சு.
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நேற்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அதிமுக பிரமுகர்களான தம்பித்துரை, ஜெயகுமார் உள்பட பல அரசியல்வாதிகள் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்தார். ஆனால் அவரை காரில் இருந்து இறங்க விடாமல் திமுக தொண்டர்கள் அவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தனர்
காவேரி மருத்துவமனையின் வாசலில் திமுக தொண்டர்கள் சிலரின் கடுமையான எதிர்ப்பு காரணமாக வைகோ கருணாநிதியை சந்திக்காமலே காரில் திரும்பிவிட்டார். அவரது கார் திரும்பி சென்றபோது காரின் மீது திமுக தொண்டர்கள் செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.,
இதுகுறித்து மதிமுக தலைமையகமான தாயகத்தில் வைகோ கூறியபோது, ' நான் வருவதை முன்கூட்டி அறிந்துகொண்டு, திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரின் தொலைபேசி ஏற்பாட்டின் பேரில்தான் என்னைத் தாக்குவதற்கு திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்டு, 10 பெண்கள் உட்பட 70 பேர் மருத்துவமனைக்கு அருகில் திடீரென்று குவிக்கப்பட்டார்கள்.
நானும் மல்லை சத்யா, முராத் புகாரி, 7 மாவட்டச் செயலாளர்களும் காவேரி மருத்துவமனையை நெருங்கும்போதே அதில் முதல் காரில் முன் இருக்கையில் வந்த என்னை நோக்கி செருப்புகளும், கற்களும் வீசப்பட்டன. கார் மீது மரக்கட்டைகள் வந்து விழுந்தன. என் பின்னால் வந்த வண்டிகளில் வந்த தோழர்கள் நியாயமான ஆத்திரத்தோடு முன்னால் ஓடிவந்தார்கள். நான் காரைவிட்டு இறங்கி, அவர்கள் அனைவரையும் சத்தம்போட்டு, அவர்கள் தாக்கினால் தாக்கட்டும். நாம் திரும்பிச் சென்றுவிடுவோம் என்று கூறியவாறு அங்கிருந்து நாங்கள் சென்றுவிட்டோம்' என்று கூறினார்.
இந்த சம்பவத்திற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments