காத்தோம் ஜல்லிக்கட்டை ! காப்போம் கலாச்சாரத்தை !

  • IndiaGlitz, [Wednesday,December 20 2017]

மேற்கத்திய கலச்சாரத்தின் ஆதிக்கம் உள்ள இந்த காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய வேட்டி சட்டைகளுக்கு எதிரான மனநிலையில் தான் அதிகபடியான மக்கள் தங்களது வாழ்க்கை சூழ்நிலையை மாற்றி கொண்டு உள்ளனர். கோவில் திருவிழா, திருமணம் போன்ற சில அரிய நிகழ்வுகளில் மட்டும் தான் நமது பாரம்பரிய உடையான வேட்டி சில இடங்களில் கண்ணுக்கு தெரிகிறது.
தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வேட்டிக் கட்டிக்கொண்டு ஹை ஃபையான கிளப்களுக்குள் நுழையக் கூடாது என கூறியது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன் பின் தமிழக அரசு “வேட்டி கட்டி வரக் கூடாது என்று தடை விதிக்கும் கிளப்புகளின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தடாலடியாகச் சட்டம் பிறப்பித்துத் தமிழர்களின் மனதைக் குளிர வைத்தது.
அந்த சமயத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐஏஎஸ் பொங்கலை ஒட்டி வேட்டி தினம் கொண்டாடுவோமே எனச் சொல்ல, அந்தக் கோரிக்கையும் அரசால் நிறைவேற்றப்பட்டுப் பள்ளி, கல்லூரி, அலுவலகம் ஆகிய இடங்களில் ஜனவரி 6 ல் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
அதேபோல தமிழர் பாரம்பரியம் - பண்பாடு - கலாச்சாரம் பற்றி தமிழக மக்களிடமும் இளைஞர்களிடமும் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது 2017 - ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். அதைப்போலவே பாரம்பரிய உடை கலாச்சாரத்தையும் தமிழர்கள் விட்டு கொடுக்காமல் வேட்டி அணிந்து அதை காக்க முன்வர வேண்டும். ஜனவரி 6 - ல் வேட்டி தினத்தில் அனைவரும் வேட்டி கட்டி நமது பாரம்பரியத்தை காப்போம்.
இந்த அழகான தருணத்தில் நமது பாரம்பரிய உடையை பல ஆண்டுகளாக தயாரித்து விற்பனை செய்வது வரும் MCR வேட்டிகள் சர்ட்டுகள் குழுமம் நம்முடன் இணைந்து வேட்டி தினத்தை கொண்டாட உள்ளது.