'மழை பிடிக்காத மனிதன்', 'ராயன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,August 16 2024]

ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் திடீரென இன்று ஓடிடியில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் விதிமுறை வகுத்துள்ள நிலையில் ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியாகி இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படம் இன்று முதல் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா தவிர மற்ற நாடுகளில் மட்டும் தான் இந்த படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகி உள்ளன. ’ராயன்’ திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்.. தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் மற்றும் இரண்டு வெப் தொடர்கள் வெளியாக இருப்பதை அடுத்து தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக கருதப்படுகிறது.

'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்டை சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த அப்டேட்டை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..விருதுகளை அள்ளிய மணிரத்னம் , தனுஷ் படங்கள்..!

70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

'தளபதி 69' படம் இயக்குவதை உறுதி செய்த எச் வினோத்.. அரசியல் படமா?

தளபதி விஜய் நடிக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானாலும் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்ற நிலையில் நேற்று நிகழ்ச்சி

தமிழில் மொழிபெயர்ப்பு.. புதிய முயற்சியை அறிவித்த கமல்ஹாசன்.. அனைத்தும் இலவசம்..!

தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கமல் பண்பாட்டு மையம் 'மொழிபெயர்ப்புப் பயிற்சி முகாம்' நடத்துகிறது என கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில்