'மழை பிடிக்காத மனிதன்', 'ராயன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் திடீரென இன்று ஓடிடியில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் வெளியாக வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் விதிமுறை வகுத்துள்ள நிலையில் ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வெளியாகி இரண்டே வாரங்களில் ஓடிடியில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த படம் இன்று முதல் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்தியா தவிர மற்ற நாடுகளில் மட்டும் தான் இந்த படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலும் வெளியாகி உள்ளன. ’ராயன்’ திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
OUT NOW | #MazhaiPidikkathaManithan
— Simply South (@SimplySouthApp) August 16, 2024
Streaming on Simply South worldwide, excluding India.
▶ https://t.co/hfsm8ADXZa pic.twitter.com/Jzqhv5yhH2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com