'மெய்யழகன்' ஆடியோ  ரிலீஸ் தேதி அறிவிப்பு.. கார்த்தி ரசிகர்கள் குஷி..!

  • IndiaGlitz, [Thursday,August 29 2024]

கார்த்தி நடித்த ’மெய்யழகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்தி நடிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில், சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மெய்யழகன்’.

இந்த படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் நிலையில் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 31ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ ரிலீஸ் ஆகும் இடம் மற்றும் நேரம் குறித்து அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தி மற்றும் பிரேம்குமார் முதல் முறையாக இணைந்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.