தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை தான் காப்பாற்றிய சிறுவனுக்காக வழங்கிய மயூர் ஷெல்கே

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

சமீபத்தில் மும்பையில் உள்ள வாங்கனி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தாயுடன் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனை அங்கிருந்த ரயில்வே ஊழியர் ஒருவர் பார்த்த நிலையில் மின்னல் வேகத்தில் சென்று அந்த சிறுவனை காப்பாற்றி, தன்னுடைய உயிரையும் கடைசி நொடியில் காப்பாற்றிக் கொண்டார்

இதுகுறித்த சிசிடிவி கேமரா வீடியோ இணையதளங்களில் வைரலாகி சிறுவனை காப்பாற்றிய அந்த ரயில்வே ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இந்த நிலையில் சிறுவனை காப்பாற்றிய ரியல் ஹீரோ மயூர் ஷெல்கேவுக்கு ரயில்வே உயரதிகாரிகள் பாராட்டுகளையும் பரிசுகளையும் குவித்து வருகிறது என்பதும் மேலும் ஜாவா நிறுவனம் ஒரு புதிய பைக்கை மயூர்ஷெல்கேவுக்கு பரிசாக அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையில் ஒரு பகுதியை தான் காப்பாற்றிய சிறுவனின் படிப்பு செலவுக்காக மயூர்ஷெல்கே வழங்கியுள்ளார். இந்த தகவல் தெரிந்ததும் அவரது மதிப்பு இன்னும் பல மடங்கு மக்கள் மத்தியில் உயர்ந்துள்ளது. அவருக்கு மேலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.