'மெர்சலுக்கு' அடுத்து தினகரனை விளம்பரம் செய்கிறது மத்திய அரசு: மயில்சாமி

  • IndiaGlitz, [Friday,November 10 2017]

தற்போது மத்திய அரசே அனைத்து விஷயங்களையும் தானே விளம்பரம் செய்து வருவதாகவும், மெர்சல் விஜய்யை இந்தியா முழுவதும் விளம்பரம் செய்தது போல் தற்போது டிடிவி தினகரனை, ரெய்டு மூலம் இந்தியா முழுவதும் அரசு விளம்பரம் செய்து கொண்டிருப்பதாகவும், தனியார் செய்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நடிகர் மயில்சாமி கூறியுள்ளார்

வருமானவரி சோதனை என்பதை தான் குறை கூற விரும்பவில்லை என்றும், அவர்கள் நினைத்தால் மோடி, எடப்பாடி பழனிச்சாமி, ஜனாதிபதி வீட்டிற்கு கூட ரெய்டுக்கு செல்ல உரிமை உண்டு என்று கூறிய மயில்சாமி, இந்த ரெய்டில் இருக்கும் பின்னணி குறித்து கூறினார்

இரட்டை இலை சின்னத்திற்கும், 18 எம்.எல்.ஏக்கள் மூலம் அரசுக்கும் பிரச்சனை கொடுத்து வரும் தினகரனை அடக்கி வைக்க செய்யும் நாடகமே இந்த ரெய்டு என்று மயில்சாமி கூறினார். ஜெயலலிதா மறைந்த அன்று மோடி தமிழகம் வந்தபோது சசிகலா தலையில் கைவைத்ததையும், பன்னீர்செல்வத்தை கட்டி அணைத்த்தில் இருந்தே ஏதோ நடைபெற போகிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டனர், அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது' என்று மயில்சாமி கூறினார்.