மக்களின் உயிரை கொல்ல அரசே இலக்கு நிர்ணயிப்பதா? தமிழக அரசுக்கு காமெடி நடிகர் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுமக்களின் உயிரை கொலை செய்ய ஒரு அரசு இலக்கு நிர்ணயிப்பது கடும் கண்டனத்துக்குரியது என காமெடி நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்
நடுக்காட்டுபட்டியைச் சேர்ந்த சென்ற சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் மயில்சாமி அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சுஜித்தின் மரணம் எதிர்பாராத ஒன்று என்றாலும் ஒரு குழந்தையை பெற்றோர்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய கடமை என்றும், குழந்தைக்கு தனியாக விவரம் தெரியும் வரை பெற்றோர்கள் குறிப்பாக தாயார் குழந்தையை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த விஷயத்தில் அரசை குறை சொல்ல வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது ’டாஸ்மார்க் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது பொதுமக்களின் உயிரை எடுக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதற்கு சமம் என்றும் இது பெரும் கண்டனத்துக்கு உரியது என்றும் மதுப்பழக்கத்தால் பல உயிர்கள் இழக்கப்பட்டு வரும் நிலையில் மதுப்பழக்கத்தை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மதுவிற்பனைக்கு இலக்கை நிர்ணயிப்பது சரியானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments