மக்களின் உயிரை கொல்ல அரசே இலக்கு நிர்ணயிப்பதா? தமிழக அரசுக்கு காமெடி நடிகர் கண்டனம்

  • IndiaGlitz, [Thursday,October 31 2019]

பொதுமக்களின் உயிரை கொலை செய்ய ஒரு அரசு இலக்கு நிர்ணயிப்பது கடும் கண்டனத்துக்குரியது என காமெடி நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்

நடுக்காட்டுபட்டியைச் சேர்ந்த சென்ற சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் அந்த குழந்தையின் புகைப்படத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் மயில்சாமி அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சுஜித்தின் மரணம் எதிர்பாராத ஒன்று என்றாலும் ஒரு குழந்தையை பெற்றோர்கள் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய கடமை என்றும், குழந்தைக்கு தனியாக விவரம் தெரியும் வரை பெற்றோர்கள் குறிப்பாக தாயார் குழந்தையை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் இந்த விஷயத்தில் அரசை குறை சொல்ல வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த போது ’டாஸ்மார்க் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பது பொதுமக்களின் உயிரை எடுக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதற்கு சமம் என்றும் இது பெரும் கண்டனத்துக்கு உரியது என்றும் மதுப்பழக்கத்தால் பல உயிர்கள் இழக்கப்பட்டு வரும் நிலையில் மதுப்பழக்கத்தை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர மதுவிற்பனைக்கு இலக்கை நிர்ணயிப்பது சரியானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்

More News

மகள், மாமியார் இருவரையும் திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு புதுவித சிக்கல்

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்ற 20 வயது இளைஞர் ஒருவர் மகள், மாமியார் ஆகிய 2 பேரையும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கொஞ்சம் கருணை காட்டுங்க: போராட்டம் செய்யும் டாக்டர்களுக்கு நடிகை வேண்டுகோள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும்

கார்த்தியின் அடுத்த இரண்டு படங்களின் ரிலீஸ் திட்டம்!

கடந்த தீபாவளி திருநாளில் விஜய் நடித்த பிகில் படத்துடன் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வசூலைப் பெற்று வருகிறது. 

விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'தெறி' இந்தப் படம்தான் விஜய்-அட்லீ இணைந்த முதல் திரைப்படம்

சுஜித் மீட்புப்பணிக்கு ஆனா செலவு எத்தனை கோடி? அதிர்ச்சி தகவல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் அக்டோபர் 25-ஆம் தேதி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில்,