'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் மயில்சாமி செய்த மகத்தான காரியம்

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சலால் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிக்கு இணையானதாக கூறப்படுவது நிலவேம்பு கசாயம். இந்த கசாயத்தை பல சமூக நல அமைப்புகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வரும் நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று சென்னையில் விஷால்-லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் சுமார் 1000 பேர்களுக்கு வழங்கினார். அவருக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

முன்னதாக நடிகர் மயில்சாமி நேற்று சென்னையின் பல பகுதிகளில் தெருத்தெருவாக சென்று மைக் மூலம் அறிவிப்பு செய்து நிலவேம்பு கசாயத்தை சுமார் 5000 பேர்களுக்கும் மேல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்னை காவல் நிலையத்தில் இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ 

இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ ஆக சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில்  பிரித்திகா யாஷினி இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்

கமல்-ரஜினி இருவருக்கும் சேர்த்தே 10% ஓட்டுதான் கிடைக்கும்: சாருஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிக்க கிட்டத்தட்ட தயாராகிவிட்டார். அவர், வரும் நவம்பர் 7ஆம் தேதி அவருடைய பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

விஷால் கோரிக்கை நிராகரிப்பு: தீபாவளி படங்களின் நிலை என்ன?

நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் 64ஆம் ஆண்டின் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் பேசியபோது,

அர்ச்சகர் நியமனத்தில் கமல் காட்டும் அக்கறை

கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்து வரும் நிலையில் இன்று அர்ச்சகர் நியமனம் குறித்த தனது கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

ஸ்லீப்பர்செல்கள் ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். சி.ஆர்.சரஸ்வதி 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறைதண்டனை பெற்ற சசிகலா, கடந்த வாரம் ஐந்து நாள் பரோலில் வெளிவந்த நிலையில் தமிழக அரசியலில் மாற்றம் நடக்க வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானது.