'சண்டக்கோழி 2' படப்பிடிப்பில் மயில்சாமி செய்த மகத்தான காரியம்

  • IndiaGlitz, [Monday,October 09 2017]

தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் டெங்கு காய்ச்சலால் பலியாகும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்க தடுப்பூசிக்கு இணையானதாக கூறப்படுவது நிலவேம்பு கசாயம். இந்த கசாயத்தை பல சமூக நல அமைப்புகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வரும் நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று சென்னையில் விஷால்-லிங்குசாமியின் 'சண்டக்கோழி 2' படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் சுமார் 1000 பேர்களுக்கு வழங்கினார். அவருக்கு படக்குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

முன்னதாக நடிகர் மயில்சாமி நேற்று சென்னையின் பல பகுதிகளில் தெருத்தெருவாக சென்று மைக் மூலம் அறிவிப்பு செய்து நிலவேம்பு கசாயத்தை சுமார் 5000 பேர்களுக்கும் மேல் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.