மிகச்சிறந்த முன்மாதிரி… அரசு பேருந்தில் அலுவலகம் வந்த பெண் கலெக்டர்!

  • IndiaGlitz, [Monday,December 20 2021]

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிவரும் திருமதி லலிதா இன்றுகாலை தனது வீட்டில் இருந்து அரசுப் பேருந்தில் பயணம் செய்து தனது அலுவலகம் வந்துள்ளார். மேலும் ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் இந்த நடைமுறை தொடரும் எனவும் கூறியுள்ளார்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்கும் வகையிலும் இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அரசு அதிகாரிகள் வாரத்திற்கு ஒருமுறை பொது போக்குவரத்து மற்றும் மிதிவண்டியைப் பயன்படுத்துமாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

இதை நடைமுறைப்படுத்தும் வகையில் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவரும் பெண் கலெக்டர் திருமதி லலிதா அவர்கள் இன்று காலை தனது வீட்டிலிருந்து நடந்தே வந்து அரசு பேருந்தில் (மகளிர் இலவசப் பயணத்தை பயன்படுத்தி) டிக்கெட் எடுக்காமல் 3 கிலோ மீட்டர் தூரம் வரை பயணம் செய்துள்ளார். மேலும் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவு நடந்தே அலுவலகம் சென்றுள்ளார்.

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் லலிதா காலநிலை மாற்றத்தை கருத்தில்கொண்டு ஒவ்வொரு திங்கள் கிழமைதோறும் மயிலாடுதுறை அரசு அதிகாரிகள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு பரிந்துரைத்து இருக்கிறேன். நானும் இவ்வாறே பொதுபோக்குவரத்தில் பயணம் செய்யவுள்ளேன். இது சிறிய செயலாகத் தெரியலாம். ஆனால் பெரிய மாற்றத்தை கொண்டுவரும் எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு அரியலூர் பெண் கலெக்டர் ரமண சரஸ்வதி தனது வீட்டிலிருந்து நடந்தே அலுவலகம் வந்தார். மேலும் வாரத்தில் ஒருநாள் இப்படி அலுவலகம் வருவதை பழக்கப்படுத்திக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தனது உதவியாளர்களுடன் மிதிவண்டியை மிதித்துக் கொண்டு அலுவலகம் வந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

புதுசா பாவனிக்கு ஒரு அடிமை வந்திருக்காங்க: சொன்னது யார் தெரியுமா?

பாவனிக்கு புதுசா ஒரு அடிமை வந்து இருக்காங்க என அக்சரா கூறியிருக்கும் காட்சி இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது.

இணையத்தில் வைரலான டீடாக்ஸ் கருப்பு இட்லி… செய்வது எப்படி?

தென்னிந்திய உணவு முறைகளில் மிகவும் பாரம்பரியமாக இருந்துவரும் உணவுப்பொருட்களுள் ஒன்று இட்லி. அதுவும் வெள்ளை

திடீரென துபாய்க்கு குடிபெயர்ந்த நடிகர் மாதவன்… என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் முன்னிணி நடிகராக இருந்துவரும் நடிகர் மாதவன்

நான் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை: பிரபலத்துடன் இணைந்தது குறித்து 'கோமாளி' இயக்குனர் 

நான் அவருடன் இணைந்து பணி வருவேன் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என 'கோமாளி' பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அடுத்தவங்களோட கஷ்டத்தில சந்தோஷப்பட்ற ஒரே ஆள் நீதான்: பிரியங்காவை வெளுத்து வாங்கும் போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டில் இன்று நடைபெறும் கேப்டன் பதவிக்கான டாஸ்மாக்கில் அனைத்து போட்டியாளர்களும் கலந்து கொண்ட நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே