சி.வி.குமாரின் 'மாயவன்' ஓப்பனிங் வசூல் எப்படி?

  • IndiaGlitz, [Monday,December 18 2017]

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கிய முதல் திரைப்படமான 'மாயவன்' நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்னை ஓப்பனிங் வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்

இந்த படம் சென்னையில் 16 திரையரங்குகளில் 135 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.42,32,994 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை சென்னையில் ரூ.50,49,352 வசூல் செய்து நல்ல ஓப்பனிங் வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இதேபோல் புதுமுகங்களின் நடிப்பில் வெளிவந்து பாராட்டுக்களை பெற்று வரும் 'சென்னை 2 சிங்கப்பூர்' திரைப்படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் ரூ.7,53,956 வசூல் செய்து சராசரி வசூல் படங்களின் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அருவி'யின் அபாரமான ஓப்பனிங் வசூல் விபரம்

100 வருட தமிழ் சினிமாவில் குறிஞ்சிப்பூ போன்று அனைவரும் போற்றும் வகையில் ஒரு படம் உருவாகுவது அபூர்வமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் ஒரு படம் தான்

'அருவி' அதிதிபாலனுக்கு ஷங்கர் பாராட்டு

கடந்த வாரம் வெளிவந்த 'அருவி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஊடகங்களும் விமர்சகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

விஜய்சேதுபதி-நயன்தாரா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

விஜய்சேதுபதி, நயன்தாரா முதன்முதலில் இணைந்து நடித்த 'நானும் ரெளடிதான்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் இருவரும் இணைந்து நடித்த படம் 'இமைக்கா நொடிகள்'.

டுவிட்டரில் ஓவியாவின் முக்கிய அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் பிசியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பெற்றவர் ஓவியா

அருவி'யில் நடிக்க மறுத்த முன்னணி நடிகைகள் யார் யார் தெரியுமா?

சமீபத்தில் வெளிவந்த 'அருவி' திரைப்படம் ஊடகங்கள், சமூக வலைத்தள பயனாளிகள் மற்றும் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.