நிக்சன் - ஐஷு சீக்ரெட்டை உடைத்த மாயா.. நிக்சனின் ரியாக்சன் என்ன?

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் தொடங்கி 75 நாட்கள் இன்று நிறைவு பெற்றதை அடுத்து, முதல் ப்ரோமோவில் அனைத்து போட்டியாளர்களும் ஸ்வீட் எடுத்து கொண்டாடியதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய அடுத்த புரோமாவில் கடந்த 75 நாட்களில் ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

விஜய் வர்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சின்ன வயதில் இருந்து குடும்பத்தில் இருந்து தான் பிரிந்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். அர்ச்சனா பேசும்போது ’எப்பவுமே நான் கம்போர்ட் ஜோனில் இருந்து பழகி விட்டேன், இது மாதிரி ஒரு சூழலில் வந்து இருப்பது என்பது எனக்கு பெரிய விஷயம்’ என்று கூறினார்.

இதனை அடுத்து பேச வந்த விசித்ரா ’ஒரு நாள் என்னிடம் அர்ச்சனா, உங்களை நான் நம்பவில்லை என்று சொன்னபோது எனக்கு ரொம்ப மனம் கஷ்டமாக இருந்தது. நியாயமாக பேசும்போது அதை புரிந்து கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருக்கணும்’ என்று சொன்னார்.

இதனை அடுத்து பேச வந்த மாயா ’நான் ஒரு சீக்ரெட் சொல்கிறேன், ஒருநாள் நிக்சன், ஐஷு என்னிடம் வந்து பேசினார்கள்’ என சொல்ல முயன்றபோது இடைமறித்த நிக்சன், ’என் சீக்ரெட்டை நீங்க ஏன் சொல்றீங்க’ என்று கூற ’ஏங்க இப்படி பண்றீங்க’ என்று மாயா கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவு பெறுகிறது.

மொத்தத்தில் இன்று நிக்சன் குறித்து ஒரு முக்கிய விஷயத்தை மாயா பேச வருகிறார் என்பது மட்டும் இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.

More News

விஜய்யின் 'புலி'க்கு பின் சிம்புதேவனின் அடுத்த படம்.. டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..!

தளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன்  8 ஆண்டுகளுக்கு பின் இயக்கிய திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி உள்ளது.  

இந்த வாரம் ஓடிடியில்  'கிடா' உள்பட 3 தமிழ் படங்கள்.. முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று 'ஃபைட் கிளப்' உள்பட ஒரு சில படங்கள் வெளியாகி உள்ளன.

போடு ஆட்டம் போடு.. திடீரென ஸ்வீட் உடன் கொண்டாடும் போட்டியாளர்கள்: என்ன விசேஷம்?

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அதில் அனைத்து போட்டியாளர்களும் ஆட்டம் பாட்டத்துடன்

'அயலான்' உள்பட 2 படங்களை வெளியிட நீதிமன்றம் தடை.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயன் நடித்த  'அயலான்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் நடித்த வைபவ் நடித்த 'ஆலம்பனா' என்ற திரைப்படம்

ஆதிக் ரவிச்சந்திரன் - பிரபு மகள் ஐஸ்வர்யா திருமணம்.. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் இளைய திலகம் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமணம் இன்று நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை