நிக்சன் - ஐஷு சீக்ரெட்டை உடைத்த மாயா.. நிக்சனின் ரியாக்சன் என்ன?

  • IndiaGlitz, [Friday,December 15 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் தொடங்கி 75 நாட்கள் இன்று நிறைவு பெற்றதை அடுத்து, முதல் ப்ரோமோவில் அனைத்து போட்டியாளர்களும் ஸ்வீட் எடுத்து கொண்டாடியதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய அடுத்த புரோமாவில் கடந்த 75 நாட்களில் ஏற்பட்ட அனுபவம் குறித்து ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

விஜய் வர்மா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சின்ன வயதில் இருந்து குடும்பத்தில் இருந்து தான் பிரிந்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். அர்ச்சனா பேசும்போது ’எப்பவுமே நான் கம்போர்ட் ஜோனில் இருந்து பழகி விட்டேன், இது மாதிரி ஒரு சூழலில் வந்து இருப்பது என்பது எனக்கு பெரிய விஷயம்’ என்று கூறினார்.

இதனை அடுத்து பேச வந்த விசித்ரா ’ஒரு நாள் என்னிடம் அர்ச்சனா, உங்களை நான் நம்பவில்லை என்று சொன்னபோது எனக்கு ரொம்ப மனம் கஷ்டமாக இருந்தது. நியாயமாக பேசும்போது அதை புரிந்து கொள்ளும் பக்குவம் எல்லாருக்கும் இருக்கணும்’ என்று சொன்னார்.

இதனை அடுத்து பேச வந்த மாயா ’நான் ஒரு சீக்ரெட் சொல்கிறேன், ஒருநாள் நிக்சன், ஐஷு என்னிடம் வந்து பேசினார்கள்’ என சொல்ல முயன்றபோது இடைமறித்த நிக்சன், ’என் சீக்ரெட்டை நீங்க ஏன் சொல்றீங்க’ என்று கூற ’ஏங்க இப்படி பண்றீங்க’ என்று மாயா கூறுவதுடன் இன்றைய புரோமோ முடிவு பெறுகிறது.

மொத்தத்தில் இன்று நிக்சன் குறித்து ஒரு முக்கிய விஷயத்தை மாயா பேச வருகிறார் என்பது மட்டும் இந்த ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.