இதுக்கப்புறம் எல்லாம் அவன் ஃபிரண்டே கிடையாது.. இப்படி ஒரு கப்பு வாங்கனுமா? மாயா சொன்னது யாரை?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்னும் 3 வாரத்தில் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிவிடும். இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து கலகலப்பை ஏற்படுத்தினாலும் சில குட்டைகளையும் குழப்பி விட்டு சென்றுள்ளனர்.
குறிப்பாக விக்ரம் சரவணனுக்கு அவருடைய தங்கை மாயா மற்றும் பூர்ணிமா குறித்து சில விஷயங்களை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விக்ரமின் தங்கை வருகை குறித்து மாயா, பூர்ணிமாவுடன் பேசும் காட்சிகள் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோவில் உள்ளன.
அதில் அண்ணன் தங்கச்சி ரொம்ப இது பண்றாங்க,என்ன தெரியுமா பண்றாங்க, நமக்குள்ள இருக்கிற உறவுகளை உடைக்குறாங்க, இதுக்கு அப்புறம் எல்லாம் அவன் பிரண்டே கிடையாது’ என்று மாயா கூறுகிறார்.
அப்போது பூர்ணிமா ’இந்த அட்வைஸ் உனக்கு ரொம்ப உதவியா இருக்கும், இனிமேலாவது நல்லா விளையாடு’ என்று கூற அதற்கு மாயா ’இப்படி ஒரு கப்பை வாங்குறதுக்கு அசிங்கப்படணும்’ என்று கூறினார்.
‘அப்ப அந்த வாரம் அவன் போயிட்டானா என்ன பண்ணுவ, என்று பூர்ணிமா கேட்க அதற்கு மாயா ’மூஞ்சிய வச்சுகிட்டு என்ன செய்வான்? என கூறும் காட்சிகளுடன் புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.
மாயா, பூர்ணிமா எதிர்பார்ப்பின்படி இந்த வாரம் விக்ரம் வெளியேறுவாரா? அல்லது தொடர்ச்சியாக இருந்து மாயா, பூர்ணிமாவுக்கு சவாலாக இருப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments