நம்மகிட்ட இனி வச்சுக்கவே கூடாது.. அப்படி வச்சு செய்யணும்.. மாயாவின் வேற லெவல் ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் மாயா பேசும் ஆவேச காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளன. பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் உரையாடும் வீடியோவில், ‘உன்னை மட்டும் அனுப்பிச்சிட்டாங்க என்றால் நானே வெளியே போயிடுவேன். இவங்க கூட எல்லாம் என்னால வாழவே முடியாது’ என்று மாயா கூறுகிறார்.
மேலும் ’எல்லாரையும் தெறிக்க விடணும், ஜோவிகா, யுகேந்திரனை எல்லாம் வச்சு செய்யணும், செய்யணும்ன்னா நம்மகிட்ட வச்சிக்கவே கூடாது அந்த அளவுக்கு செஞ்சிடனும் என்று ஆவேசமாக மாயா கூறுகிறார்.
ஒருவேளை அடுத்த வாரம் பிக் ஹவுஸில் மாயாவும், ஸ்மால் ஹவுஸில் ஜோவிகா, யுகேந்திரன் உள்ளிட்டோர் இருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது என்று பார்வையாளர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com