பிரதீப்பே இருந்திருக்கலாம் போல.. மாயா புலம்பலுக்கு இந்த போட்டியாளர் தான் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்பால் பெண்களுக்கு ஆபத்து என்ற குற்றச்சாட்டை சுமத்தி மாயா குரூப்பினர் சதி செய்து வெளியே தள்ளிவிட்டனர். பிரதீப் சென்று ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், தற்போது தற்போது பிரதீப் சென்றதால் ஏற்படும் பிரச்சனைகளை பார்த்து பிரதீப்பே இருந்திருக்கலாம் என்று சொல்ல தொடங்கிவிட்டனர்.
குறிப்பாக வைல்ட் கார்டு போட்டியாளர்களான அர்ச்சனா மற்றும் தினேஷ் கொடுக்கும் குடைச்சலை மாயா குரூப்பால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் மாயா, ஐஷு மற்றும் பிராவோ ஆகிய மூவரும் பேசிக்கொண்டிருக்கும் போது இவங்க கொடுக்கிற டார்ச்சருக்கு பதிலாக பிரதீப்பே இருந்திருக்கலாம், அவன் கொடுத்த டார்ச்சர் தாங்கிக் கொண்டு கூட கேம் விளையாடி இருக்கலாம் ,அவனும் நன்றாக விளையாடி இருப்பான், ஆனால் இவங்க விஷமா இருக்காங்க, தாங்கவே முடியவில்லை என்று தினேஷ் குறித்து மாயா கூறுகிறார்
மொத்தத்தில் பிரதீப் இல்லாத குறையை தினேஷ் தீர்த்து வைப்பதால், தினேஷை எப்படி வெளியேற்றுவது என்று அடுத்த கட்டமாக மாயா குரூப் யோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் மாயா குரூப்பினர் ஒவ்வொருவராக வெளியேறினால் தான் அவர்களுக்கு உண்மை தெரிய வரும்.
#Maya - Toxic Ah iruku Ithuku #Pradeep ye Irunthirukalam pola
— BBTamilVideos (@BBTamilVideos) November 10, 2023
#BiggBossTamil7 #BiggBossTamilpic.twitter.com/E4QEKv5d0Y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments