நீங்க பெர்ஃபார்ம் பண்றதுக்காக டான்ஸ் பிராக்டீஸ் பண்றது போல தெரியலையே.. மாயா கேட்ட அந்த கேள்வி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக பூர்ணிமா மற்றும் நிக்சன் நெருங்கி பழகி வருகிறார்கள் என்பதும் இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வரும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது. இருப்பினும் இருவரும் வெளியில் அக்கா தம்பி போல் பழகி வருவதாகவும் கூறி வருகின்றனர்.
ஏற்கனவே ’வெண்ணிலவே வெண்ணிலவே’ என்ற பாட்டுக்கு இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்த நிலையில் தற்போது வேறொரு பாடலுக்கு இருவரும் டான்ஸ் பிராக்டிஸ் செய்து வருகின்றனர். நேற்று கூட அர்ச்சனா பாட்டு பாட நிக்சன் மற்றும் பூர்ணிமா டான்ஸ் பிராக்டிஸ் செய்தனர். அவர்கள் நடன அசைவை பார்க்கும் போது அக்கா தம்பி போலவே தெரியவில்லை என்று பலர் கமண்ட் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ’டான்ஸ் பிராக்டிஸ் செய்வோமா அல்லது தூங்குவோமா என்று பூர்ணிமா கேட்கும் போது மாயா 'நீங்க எனக்கு தெரிந்து டான்ஸ் பெர்பார்ம் பண்றது போல தெரியலையே , பிராக்டிஸ் பண்ணனும் என்பதற்காக பெர்ஃபார்ம் பண்றீங்க’ என்று கூறுகிறார். மேலும் நீங்க எந்த வகையான பிராக்டிஸ் செய்கிறீர்கள் என்று எனக்கு புரிந்து விட்டது என்றும் கூறினார், இதை கேட்டதும் மாயா, நிக்சன் முகங்கள் சுருங்கியது போல் தெரிகிறது.
மொத்தத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஷ்ணுவுடன் நெருக்கமாக இருந்த பூர்ணிமா தற்போது நிக்சனுடன் நெருக்கமாக வருவதை பார்க்கும் போது இது எங்கே போய் முடியுமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
#Maya: Perform pandrataku practice pannale… PRACTICE KAGA PRACTICE PANDRINGA .. Her brutal honesty 😭🔥#Poornima and #Nixen munji sethuruchi. Gaaji Couple under attack 💥🤣#BiggBossTamil7 #BiggBoss7Tamilpic.twitter.com/Bk0Ph2v1pv
— Vik (@VKStheBrand) December 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout