நயன்தாராவின் 'மாயா'வுக்கு சர்வதேச அங்கீகாரம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஸ்வின் இயக்கத்தில் நயன்தாரா நடித்த 'மாயா' திரைப்படம் நேற்று முன் தினம் ரிலீஸாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து மட்டுமின்றி திரையுலகினர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில் ஹாலிவுட் பிரபலம் ஒருவர் 'மாயா' படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து எழுதியுள்ளார்.
ஹாலிவுட்டில் 'Madison Country' மற்றும் 'Contracted' போன்ற படங்களை இயக்கிய அமெரிக்க இயக்குனர் எரிக் இங்கிலாண்ட்' (Eric England) சமீபத்தில் 'மாயா' படத்தை பார்த்ததாகவும், இந்த படத்தில் கதை சொன்ன விதம், அருமையான ஒளிப்பதிவு மற்றும் ஆச்சரியப்பட வைக்கும் சவுண்ட் எபெக்ட் ஆகியவை தன்னை கவர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குனர் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் அவர் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் 'மாயா' படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளது சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததற்கு சமம் என கோலிவுட்டில் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் 225 தியேட்டர்களில் ரிலீஸான 'மாயா' முதல் நாளில் ரூ.2 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தற்போது பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்த காரணத்தினால் வார இறுதி நாட்களில் இன்னும் அதிகமான வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments