பல ரகசியங்கள் உள்ளன.. என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது.. பிக்பாஸ் குறித்து மாயா..!

  • IndiaGlitz, [Saturday,September 14 2024]

பிக் பாஸ் தமிழ் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் என்பதும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கடந்த சீசனில் சர்ச்சைக்குரிய அதே நேரத்தில் வலிமையான போட்டியாளராக இருந்த மாயா தனது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் குறித்த சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ பார்த்தேன், நன்றாக இருந்தது, மக்கள் செல்வன் சிறப்பாக இருக்கிறார். நான் பிக் பாஸ் பார்வையாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு இரண்டு விஷயங்கள் கூற விரும்புகிறேன்.

பிக் பாஸ் என்பது ஒரு பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி. பார்வையாளர்களை கவர்ந்திருக்கும் ஒரு டிவி நிகழ்ச்சி. இதில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. பிக் பாஸ் போட்டியாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக வேலை செய்கிறார்கள். ஆனால் அது உங்களுக்கு தெரியாது. அங்கே பல ரகசியங்கள் உள்ளன. அவற்றை அங்கு இருக்கும் போட்டியாளர்கள் வெளிப்படுத்த முடியாது.

உங்களுக்கு உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது, உண்மைகள் எப்போதும் மறைந்திருக்கும், இது தெரியாமல் நீங்கள் ஆணாதிக்கம் மற்றும் பெண் வெறுப்பை வெளிப்படுத்த வேண்டாம்.

பெண்கள் மீது வெறுப்பை காட்டாதீர்கள், அவர்கள் விரும்பியதை அணியவும், சுதந்திரமாக இருக்கவும் அனுமதியுங்கள். பெண்கள் அவர்களுடைய கோபத்தை காட்டுவதற்கும் சொந்த மனதை காட்டுவதற்கும் அனுமதியுங்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதற்கான ஆதாரத்தை நீங்கள் கேட்க வேண்டாம்’ என்று நீண்ட பதிவை செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.