அவன் ரொம்ப டேஞ்சர், எனக்கு பாதுகாப்பே இல்லை.. மாயா குறிப்பிடுவது எந்த போட்டியாளரை?
- IndiaGlitz, [Monday,October 09 2023]
பிக் பாஸ் 7வது சீசன் ஒரு வாரத்திற்கு முன் தொடங்கிய நிலையில் முதல் ஒரு வாரத்திலேயே போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதங்களும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கூல் சுரேஷ் சக போட்டியாளர்கள் குறித்து அடிக்கும் கமெண்ட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் கூல் சுரேஷ் குறித்து பவா செல்லத்துரையிடம் மாயா சில புகார்களை தெரிவிக்கிறார். கூல் சுரேஷ் மீது எனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை, அவர் என்னிடம் நடந்து கொள்ளும் முறை சரியில்லை. வந்த இரண்டாவது நாளே என்னை பீய்த்தபொண்ணு என்று கூறுகிறார். கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார்.
மேலும் என்னை பார்த்து அவ்வப்போது கண்ணை அடிக்கிறார். போய் கேட்டால் திமிராக பேசுகிறார், வெளியே யாராவது என்னை பார்த்து கண்ணடித்தால் பளார் என அடித்திருப்பேன். ஆனால் இங்கு நான் அவரை அடிக்க வில்லை, அமைதியாக தான் கேட்டேன், ஆனால் அவரிடம் இருந்து சரியான பதில் இல்லை, அவரை சுற்றி நான்கு பசங்கள் இருந்தார்கள், ஒருவர் கூட வாயை திறக்கவில்லை’ என்று கூறுகிறார்.
மேலும் கூல் சுரேஷ் ரொம்ப டேஞ்சர், எனக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்று மாயா கூறும் நிலையில் இதுகுறித்து பிக்பாஸ், கூல் சுரேஷ் மீது நடவடிக்கை ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Maya doesn't want to go to small house as she feels unsafe around Cool Suresh. Says she doesn't trust him.
— Bigg Boss Follower (@BBFollower7) October 8, 2023
#BiggBossTamil7 pic.twitter.com/UnkIBuUzWQ