பணப்பெட்டியை எடுத்து வெளியேறும் போட்டியாளர் இவராக இருக்கலாம்? மாயாவின் கணிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் உறவினர்கள் வருகை, டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை அடுத்து பணப்பெட்டியை எடுக்கும் டாஸ்க் தான் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக நாளை பணப்பெட்டி டாஸ்க் வரலாம் என்றும் பணப்பெட்டியை யாராவது ஒருவர் எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் காட்சியை இந்த வாரம் பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாயா, தினேஷிடம் பணப்பெட்டியை விசித்ரா எடுத்து கொண்டு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவர் வெளியே போகும் எண்ணம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அதை தினேஷ், விஷ்ணு மற்றும் மணியிடம் கூறும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளன.
முன்னதாக அர்ச்சனா டைட்டில் வின்னர் என்பது குறித்து மீண்டும் பூர்ணிமா மற்றும் விசித்ரா பேசும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது. அர்ச்சனாவுக்கு நெகட்டிவாக ஒரு வாரம் அமைந்தது. ஆனால் அதை உடனடியாக அவள் மாற்றினாள்’ என்று விசித்ரா கூற, அதற்கு பூர்ணிமா ’அதுதான் சொல்கிறேன் அர்ச்சனாவுக்கு அதிகமாக வாக்குகள் இருக்கிறது’ என்று கூறினார்.
’பொதுவாகவே அர்ச்சனாவுக்கு சப்போர்ட் அதிகமாக இருக்கிறது, அவர் மீது மக்களுக்கு அன்பு அதிகமாக இருக்கிறது’ என்று பூர்ணிமா கூறும்போது, விசித்ரா, ‘அப்போ வாக்குகள் கிடைத்துவிட்டால் ஒரு மோசமான போட்டியாளர் கூட வெற்றி பெறலாம் போல’ என்று விசித்திரா அதிருப்தியுடனும் ஆதங்கத்துடனும் கூறும் காட்சியும் இந்த ப்ரோமோ வீடியோவில் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com