மாயாவுக்கு பிக்பாஸ் கொடுத்த சலுகை.. காண்ட் ஆகும் தினேஷ் குரூப்.. என்ன நடக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
மாயா தனது சக போட்டியாளர்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அதற்கு சக போட்டியாளர்கள் எந்த ரியாக்டும் செய்யக்கூடாது என்ற சலுகையை மாயாவுக்கு பிக் பாஸ் கொடுக்கும் நிலையில் இதனால் தினேஷ் குரூப் காண்டாகும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோவில் உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களுக்கான டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது என்பதும் இன்னொரு பக்கம் பணப்பெட்டி மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது புரமோவில் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யார் இன்விசிபிள் ஆக இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள பதில் மாயா என்று பிக் பாஸ் தெரிவிக்கிறார். எனவே மாயா பிக் பாஸ் வீட்டில் இன்விசிபிளாக இருக்கலாம் என்றும் அவர் யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் அதற்கு அவர்கள் எந்தவித ரியாக்சனும் செய்யக்கூடாது என்றும் பிக் பாஸ் தெரிவிக்கிறார்.
இதனை அடுத்து மாயா தனது குரூப்பில் உள்ள பூர்ணிமா, விசித்ரா, விஜய் வர்மா ஆகியோர்களிடம் ஜாலியாக விளையாடும் நிலையில் அர்ச்சனாவிடமும் ஜாலியாக விளையாடுகிறார். ஆனால் அவர் எதிர் குரூப்பில் உள்ள தினேஷ், விஷ்ணு, மணி ஆகியவர்கள் காண்ட் ஆகும்படி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுவதால் பிரச்சனை ஏற்படும் என்று தெரிகிறது
இந்த டாஸ்க்கை பயன்படுத்தி மாயா, தினேஷ் குரூப்பினர்களை என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com