பிக்பாஸ் கோர்ட் டாஸ்க் .. மாயா கேங்கை கதற வைக்கும் விசித்ரா குரூப்..!

  • IndiaGlitz, [Friday,November 10 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்கள் மீது வழக்கு தொடக்கலாம் என பிக் பாஸ் கூறி இருந்த நிலையில் பெரும்பாலும் தொடுக்கப்பட்ட வழக்குகளில் விசித்ரா குரூப் வெற்றி பெற்று வருகிறது.

குறிப்பாக அர்ச்சனாவுக்கு ஆதரவாக விசித்ரா செயல்படுகிறார் என்று பூர்ணிமா தொடுத்த வழக்கில் பூர்ணிமா ஆதரவாளரான நிக்சன் நீதிபதியாக இருந்தும் அவர் விசித்ராவுக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்தார்.

மொத்தத்தில் மாயா கேங் இந்த நீதிமன்ற டாஸ்க்கில் தோல்வி மேல் தோல்வி பெற்றும், விசித்ரா குரூப் வெற்றி மேல் வெற்றி பெற்று வரும் நிலையில் நிக்சனிடம் மாயா உள்ளாடையை காட்டியது குறித்த வழக்கு தற்போது நடைபெறுகிறது.

இந்த வழக்கில் வாதாடும் தினேஷ், ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு கண்ணியம் உள்ளது, மாயா செய்தது தவறு என வாதாடினார். ஆனால் மாயா விளையாட்டுக்கு தான் செய்ததாக கூறினாலும், ‘இதுவே ஒரு ஆண் தன் உள்ளாடையை எடுத்து பெண்ணிடம் காண்பித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று அர்ச்சனா நச்சென ஒரு பாயிண்டை அர்ச்சனா வைத்தார்.

இந்த வழக்கிலும் விசித்ரா குரூப்புக்கு தான் வெற்றி கிடைத்தது போல் இருக்கிறது. இதனை அடுத்து மாயா, பூர்ணிமா, ஐஷு, அக்சயா, ஜோவிகா உள்ளிட்டோர் காரசாரமாக விவாதம் நடத்தும் காட்சி இன்றைய ப்ரோமோ வீடியோவில் உள்ளது.

More News

நான் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்ல 2 கண்டிஷன்கள்: அதிர்ச்சி கொடுத்த பிரதீப்..!

 பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது அநியாயம் என்று  பிக் பாஸ் வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளியே இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும்

உடம்புல ரத்தம் சூடா இருக்குற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்: கருப்பர் நகரம் டீசர்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அடுத்த படம் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் 'கருப்பர் நகரம்' என வெளியானது

கமல் சார் உங்க டீமா? மறைமுகமாக கேட்ட தினேஷ்..! மாயாவின் அபார நம்பிக்கை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் மீதே தற்போது  மாயா கேங்கிற்கு பயமில்லாமல் போய்விட்டது என்பது அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

எத்தனை ஹிட் கொடுத்தோம் என்பது முக்கியமில்லை.. மீண்டு வருவது தான் முக்கியம்: சமந்தா எமோஷனல் பதிவு..!

திரையுலகில் ஒரு நடிகரோ நடிகையோ எத்தனை ஹிட் கொடுத்தார்கள் என்பது முக்கியமில்லை, கஷ்டங்களில் இருந்து அவர் மீண்டு வந்தாரா என்பது தான் முக்கியம் என நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

விறுவிறுப்பாக நடைபெறும் 'துருவ நட்சத்திரம்' பிசினஸ்: படக்குழுவினர் மகிழ்ச்சி..!

விக்ரம் நடிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்  இந்த படத்தில் ஏராளமாக பிரச்சனை இருந்ததாகவும் தற்போது