ஒண்ணுமே பண்ணக்கூடாதுன்னா என்ன தெரியுமா? நிக்சனுக்கு காதல் ரகசியத்தை சொல்லி கொடுத்த மாயா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான மாயா ஆரம்பம் முதலே மிகவும் தந்திரத்துடன் விளையாடி வருகிறார் என்பதும் அவர் தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை கூட சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளும் விதம் ஆச்சரியப்பட வைக்கும் என்பதும் தெரிந்ததே. கமல்ஹாசன் அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கேட்கும் கேள்விகளுக்கு கூட அவர் சிரித்து மழுப்பி, தன் மீது உள்ள தவறை மறைத்து விடுவார் என்பதும் பல புத்திசாலித்தனமான விஷயங்களை அவர் செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
மாயாவின் டேலண்டை பார்த்து பலர் ஆச்சரியப்பட்டாலும் அவர் சிலரை குறிவைத்து காட்டும் வெறுப்புணர்ச்சி குணம் தான் அவர் மீது பார்வையாளர்களுக்கு வெறுப்படைய வைத்தது என்பதும் ஆனால் அதே நேரத்தில் கடந்த சில வாரங்களாக அவர் தனது குணத்தை மாற்றிக் கொண்டார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் நிக்சன் மற்றும் மாயா இடையே நடந்த உரையாடல் குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அதில் மாயாவின் முழு திறமை வெளிப்பட்டு உள்ளது. ஒருவர் காதல் வயப்படும்போது எப்படி இருக்க வேண்டும் என்பதை 100 படங்கள் இயக்குனரை விட மிக அழகாக நிக்சனுக்கு அவர் சொல்லித் தருகிறார்.
குறிப்பாக அதில் ’ஒன்றுமே செய்யாமல் இருக்க வேண்டும்’ என்பது எப்படி என்பதை அவர் சொல்லிக் கொடுக்கும் முறை, அவர் தரும் விளக்கம் ஆகியவை மிகவும் புதிதாக இருந்தது. நடுநிலை என்பது மனதிலும் உடலிலும் கொண்டு வருவது என்பது மிகவும் கடினம், ஆனால் அதை கொண்டு வந்து விட்டால் சாதிக்கலாம் என்றும் கூறிய மாயா ஒரு பெண்ணை பார்த்து ஒன்றுமே உணர்ச்சிவசப்படாமல், ஒரு டயலாக் எப்படி சொல்ல வேண்டும்? எப்படி கடந்து போக என்பதை நிக்சனிடம் விளக்கி கூறினார்.
மேலும் அவர் உன்னுடைய வாழ்க்கையில் காதல், வெறுப்பு, துரோகம் எல்லாவற்றையும் சந்திக்க வேண்டும் என்றும் அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நிக்சனிடம் அவர் விளக்கம் தகவல்கள் உண்மையில் ஆச்சரியப்பட வைக்கிறது.
இவ்வளவு சின்ன வயதில் மாயாவிடம் இத்தனை திறமையா? என்று பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். இனி இருக்கும் குறைந்த நாளில் மாயா தனது முழு திறமையை காட்டினால் மற்ற போட்டியாளர்கள் அவர் பக்கத்தில் கூட நெருங்க முடியாத அளவுக்கு அவர் உச்சத்திற்கு சென்று விடுவார் என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.
#Maya Is Powerful Artist 🔥 (Part - 1)
— BIGG BOSS FOLLOWER (@BiggBosstwts) December 19, 2023
Her Creativity , sense of humour 🔥🔥
Ultimate 👌👌
Intersting Conversation With #Nixen 😎#BiggBossTamil7 #BiggBossTamil #biggboss7tamilpic.twitter.com/5Z1mO3Uv7u
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments