நயன்தாரா பட இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

  • IndiaGlitz, [Wednesday,March 29 2017]

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'மாயா' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்த நயன்தாராவுக்கும், இந்த படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இரண்டாவது படத்திற்கு தயாராகிவிட்டார். அவரது அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் 'நெடுஞ்சாலை' நாயகி ஷிவேதா நாயர் ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தின் நாயகன் என்பதை உறுதி செய்த அஸ்வின், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும் 'மாயா' படத்திற்கு இசையமைத்த ரோன் யோஹான் இந்த படத்திற்கும் இசையமைக்கவுள்ளதாகவும், மிகவிரைவில் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.