close
Choose your channels

வீட்டுல ஃபேன் இல்லை, அதனால ஏசி போடுங்க.. பிஆர் டீமுக்கு மாயா சொன்ன ரகசிய தகவலா?

Saturday, January 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முடிவடைய இருக்கும் நிலையில் பூர்ணிமா நேற்று 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்து விட்டு சென்று விட்டார். அவர் சென்றதிலிருந்து மாயா சோகமாக இருக்கும் நிலையில் திடீரென அவர் பிக் பாஸ் குழுவினருக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.

தன்னுடைய வீட்டில் ஃபேன் இல்லை என்றும் அதனால் ஏசி மாட்ட சொல்லுங்கள் என்றும் ஏசி மாட்டினால் ஜன்னல்களை சீல் வைக்க வேண்டி இருக்கும் அதை நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்றும் உடனடியாக இதை என் வீட்டில் சொல்லுங்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இறுதிப் போட்டி நெருங்கும் நிலையில் திடீரென எங்கள் வீட்டில் ஃபேன் இல்லை ஏசி மாட்ட சொல்லுங்கள் என்று அவர் கூற வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இத்தனை நாள் ஃபேன் கூட இல்லாமல் இருந்தவர்கள் இன்னும் ஒரு வாரம் ஏசி கூட இல்லாமல் இருக்க மாட்டார்களா? என்பதே நெட்டிசன்களின் அடுத்த கேள்வி.

இந்த நிலையில் மாயா கூறியது ஒரு கோட் வேர்ட் வார்த்தை என்று ஒரு சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வீட்டில் பேன் இல்லை என்றால் எனக்கு தேவையான அளவுக்கு அதாவது இந்த ஷோவில் ஜெயிக்க தேவையான அளவுக்கு ஃபேன்ஸ் அதாவது ரசிகர்கள் இல்லை என்பதுதான் அர்த்தம் என்றும் உடனடியாக ஏசி மாட்டுங்கள் என்று சொன்னதற்கு உடனே பிஆர்ஐ ஏற்பாடு செய்து அதிகமாக தனக்கு ஓட்டு போட ஏற்பாடு செய்யுங்கள் என்று தான் அர்த்தம் என்றும் விண்டோஸ் நான் வந்து க்ளோஸ் பண்றேன் என்பதற்கு அர்த்தம், நான் நேரில் வந்து பணத்தை செட்டில் பண்ணுகிறேன் என்று அர்த்தம் என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

உண்மையில் மாயா வீட்டிற்கு ஏசி மாட்டுவதற்காக தான் அதை சொன்னாரா? அல்லது நெட்டிசன்கள் கூறியபடி இந்த கோட் வேர்ட் மூலம் தனக்கு ஆதரவைத் திரட்ட மறைமுகமாக குறிப்புகள் கொடுத்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை என்றாலும் இந்த பதிவுகள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment