கொஞ்சம் டைம் கொடுத்தா அவரை அடிச்சிடலாம்: தினேஷை கவிழ்க்க திட்டமிடும் போட்டியாளர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஒருவரை ஒருவர் வெளியேற்ற தீவிரமாக விளையாடி வருகின்றனர் என்பதும் வெளியில் இருந்து மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதால் தங்களை காப்பாற்றிக் கொள்ள பலவிதமான திட்டங்களை தீட்டி வருகின்றனர் என்பதையும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரோமோவில் தினேஷ் 'அந்த நரி கூட்டத்தை உடைக்க வேண்டும்’ என்று பேசுகிறார். இதனை அடுத்து அர்ச்சனா பேசும்போது ’அவங்க கூட்டத்தில் மெஜாரிட்டி குறையும், நான் அவர்களை தான் தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். எதற்காக அவர்களை இப்படி விளையாடுகிறார்கள்? அவர்களுக்கு ஏன் இவ்வளவு சப்போர்ட் கிடைக்கிறது என்று கூறினார்.
இந்த நிலையில் மாயாவிடம் பூர்ணிமா ’நாம் என்ன பண்ணினாலும் வார இறுதியில் நமக்கு எதிராக தான் ஏதாவது நடக்கிறது என்று கூறுகிறார். கண்டிப்பாக கமல் சார் எபிசோடில் நாம் செய்த விஷயங்கள் வரும் என்று நினைக்கிறேன்’ என்று சொல்கிறார்.
அப்போது மாயா ’அவரை அடிக்கிறது கொஞ்சம் கஷ்டம் என்று நினைக்கிறேன், ஆனால் கொஞ்சம் டைம் கொடுத்தால் அவரை அடித்து விடலாம்’ என்று தினேஷ் குறித்து கூறுகிறார். மொத்தத்தில் மாயா - பூர்ணிமா குரூப்பை உடைக்க தினேஷும் தினேஷை வெளியேற்ற மாயாவும் திட்டமிடும் நிலையில் யாருடைய திட்டம் பலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments