அவமானமா இருக்கு, தோல்வியை ஏத்துக்கிட முடியல.. அப்ப பெட்டிய எடுத்துட்டு போயிரு.. யார் யாரின் உரையாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனா தான் என்பது கிட்டத்தட்ட பார்வையாளர்கள் மட்டுமின்றி உள்ளே இருக்கும் போட்டியாளர்களும் முடிவு செய்துவிட்டனர். தினேஷ், மணி, விஷ்ணு ஆகிய மூவருக்குமே டைட்டில் வின்னர் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில் மாயா மற்றும் பூர்ணிமாவும் தற்போது தங்கள் தோல்வியின் பக்கம் சென்று கொண்டிருப்பதாக உணர்ந்துவிட்டனர்.
இதனிடையே மாயா, பூர்ணிமா பேசும் உரையாடல் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் ’தோல்வியை என்னால ஏத்துக்கிடவே முடியலை, அவமானமா இருக்குது’ என்று மாயா சொல்ல, அதற்கு பூர்ணிமா, ‘நீங்கள் பணப்பெட்டியை எடுத்து சென்று விடுங்கள், என்னால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியும், நான் கடைசி வரை இருந்து பார்க்கிறேன்’ என்று கூறுகிறார்
மாயாவுக்கு தான் தோல்வி அடைவது கூட பெரிய விஷயம் இல்லை, ஆனால் அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆக போகிறாரே என்ற வருத்தம் தான் மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதை அவருடைய பேச்சிலிருந்து தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது பணப்பெட்டியின் மதிப்பு 16 லட்சம் ரூபாய் என்று வந்திருப்பதாகவும் பணப்பெட்டி பிக்பாஸ் போட்டியாளர் ஒருவரால் எடுக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பணப்பெட்டியை எடுத்தது மாயாவா? அல்லது வேறொரு போட்டியாளரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#ToxicMaya says she won't win the show , as she saw the red carpet to #Archana 🤣🤣
— BB Mama (@SriniMama1) January 4, 2024
She will take the money box if #Poornima is not taking 🙌🙌#Maya squad ready ah? #BiggBossTamil7#BiggBoss7Tamil
pic.twitter.com/1cREwnV9lo
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments