கடும் போட்டியில் நிக்சன், மாயா.. இந்த வாரம் வெளியேறுவது யார்?

  • IndiaGlitz, [Tuesday,December 26 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெறும் என்றாலும் இந்த வாரம் எலிமினேஷனை பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக பல வாரங்களாக நாமினேஷனில் இருந்து தப்பித்த நிக்சன் மற்றும் மாயா இந்த வாரம் சிக்கி உள்ளனர்.

அதுமட்டுமின்றி விக்ரம் சரவணன் வெளியேறும் போது மாயா நடந்துகொண்ட விதம் சக போட்டியாளர்களை மட்டுமின்றி பார்வையாளர்களை மிகப்பெரிய அளவில் பாதித்தது. எனவே மாயா அதற்கு என்னதான் விளக்கம் கொடுத்தாலும் அது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என்றுதான் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் தினேஷ், மணி, விஷ்ணு, விஜய் வர்மா, ரவீனா, நிக்சன் மற்றும் மாயா ஆகியோர் நாமினேஷனில் இருக்கும் நிலையில் மாயா மற்றும் நிக்சன் ஆகிய இருவர்தான் மிக குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர்.

2 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் இதுவரை பதிவாகி உள்ள நிலையில் மாயா மற்றும் நிக்சன் ஆகிய இருவரும் சுமார் 17,000 வாக்குகள் மட்டுமே பெற்று கடைசி இரண்டு இடத்தில் உள்ளனர். எனவே இந்த இருவரில் ஒருவர் வெளியேறப்போவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் மாயா வெளியேறினால் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தில் தினேஷ் மற்றும் மணி, விஷ்ணு, விஜய் வர்மா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

 'தளபதி 68' அப்டேட் எப்போது? கிறிஸ்துமஸ் வாழ்த்தில் தெரிவித்த வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட பிரச்சனை.. கொதித்து எழுந்த கீர்த்தி பாண்டியன்..!

 நடிகை கீர்த்தி பாண்டியன் தனது பக்கத்து வீட்டுக்காரருக்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனை குறித்து தனது சமூக வலைதளத்தில் ஆவேசமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை

குடும்பத்துடன் நயன்தாராவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. க்யூட் உயிர், உலகம் புகைப்படங்கள்..!

 நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அட்லி-அல்லு அர்ஜுன் படத்தின் இசையமைப்பாளர் இவரா? ஹிட் உறுதி..!

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய சினிமாவில்

'மனமே நீ நிஜம் தானா': அமீர் படத்திற்கு புரமோஷன் செய்த சிம்பு..!

அமீர் நடித்த அடுத்த படத்தின் சிங்கிள் பாடலை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.