பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் தொடரும் குரூப்பிஸம்.. மாறாத பகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கும் போது பகை உணர்வாக இருந்தாலும் வெளியே வந்த பிறகு நட்புறவு பாராட்டி வருவதை தான் கடந்த ஆறு சீசன்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஏழாவது சீசனில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது குரூப்பிஸமாக இரண்டு குரூப்புகளாக இருந்த நிலையில் வெளியே வந்த பின்னரும் அந்த குரூப்பிஸம் தொடர்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு குழுக்களாக விளையாடினர் என்பதும் கமல்ஹாசனே அவர்களை ‘ஏ’ டீம் மற்றும் ‘பி’ டீம் என அதற்கு பெயர் வைத்தார் என்பது தெரிந்ததே. மாயா தலைமையிலான குரூப்பில் ஜோவிகா, பூரணிமா, விசித்ரா, நிக்சன், கானா பாலா, அக்ஷயா ஆகியோர்களும் தினேஷ் குரூப்பில் விஷ்ணு, பிராவோ, மணிச்சந்திரா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் இருந்தனர். அர்ச்சனா தினேஷ் குரூப்புக்கு ஆதரவாக இருந்தாலும் அவர் எல்லோரிடமும் நட்புடனும் சண்டை போட்டும் இருந்தார்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் ஏற்கனவே இருந்த குரூப்பிஸம் தொடர்ந்து வருவதாக தெரிகிறது. வனிதாவின் வீட்டில் மாயா, கானா பாலா, ஜோவிகா உள்ளிட்டோர் சந்தித்த புகைப்படங்களும் அதே போல் தினேஷ் குரூப்பில் உள்ளவர்கள் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்து நெட்டிசன்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் இன்னும் குரூப்பிஸம் தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மேலும் மாயா தோல்வி அடைந்ததை கொண்டாடும் வகையில் விஷ்ணு வெடி வெடித்ததும், அர்ச்சனா பணம் செலவழித்து தான் டைட்டில் பட்டதை வாங்கினார் என மாயா சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருவதும் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments