மாயா, தினேஷை கட்டிப்போட்ட கேப்டன்: 'நான்சென்ஸ்' என கத்திய மாயா..!

  • IndiaGlitz, [Friday,December 01 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கருத்து வேறுபாடுகள் உடன் இருப்பவர்களை கயிற்றால் கட்டி போடும் டாஸ்க் இந்த வாரம் நடந்து வரும் நிலையில் நேற்று விஷ்ணு மற்றும் அர்ச்சனா கட்டப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று தினேஷ் விசித்ரா மற்றும் மாயா ஆகிய மூவரும் கட்டப்பட்டுள்ள காட்சி இன்றைய முதல் புரோமோவில் உள்ளது

கடந்த மூன்று நாட்களாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா சண்டையை பார்த்து பார்வையாளர்கள் சலித்து விட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் தினேஷ் இடையிலான சண்டை ஆரம்பித்துள்ளது.

மாயா தினேஷ் மற்றும் விசித்ரா ஆகிய மூவரையும் கயிற்றால் கேப்டன் கட்டிவிட்ட நிலையில், மாயாவின் கயிற்றை தினேஷ் சற்று இறுக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாயா, கட்டி முடித்தவுடன் இறுக்குவது சரியல்ல என்று கூற ’நான் டைட் மட்டும் தான் பண்ணினேன்’ என்று தினேஷ் கூறுகிறார்.

’என்னை தொடுவதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று மாயா கூற, அதற்கு ’நான் டைட் மட்டும் தான் பண்ணினேன் வேறு ஏதும் செய்யவில்லை’ என்று தினேஷ் கூற உடனே கயிற்றை அவிழ்த்து விட்ட மாயா, தினேஷை நோக்கி ‘நான்சென்ஸ்’ என கூறுகிறார். ’நீதான் நான்சென்ஸ் , கிளம்பு’ என தினேஷ் பதிலடி கொடுக்கிறார்.

அதன் பிறகு ’காலையில் இப்படி யாராவது கத்துவாங்களா? திருந்தவே திருந்தாத கேஸ்’ என்று மாயா விமர்சனம் செய்ய, ‘இவங்க இஷ்டத்துக்கு கழட்டுவாங்க, நாங்க பார்த்துக்கிட்டு இருக்கணுமா, பூர்ணிமா கிட்ட ஒரு நாள் பேசலைன்னா என்ன குடியா முழுகிப் போயிடும்? என தினேஷ் கூறுகிறார்.

மொத்தத்தில் இன்றைய எபிசோடு மாயா, தினேஷ் சண்டையால் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

அடுத்தடுத்து வந்த 'அயலான்' அப்டேட்.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோ.. லண்டனில் படப்பிடிப்பு..!

தமிழ் திரையுலகின் இயக்குனர்களில் ஒருவரான மித்ரன் ஜவஹர் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனில்

மிஷ்கின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி.. டைட்டில் - பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்தி

விஜய்சேதுபதியின் அடுத்த படம் தயார்.. ரிலீஸ் எப்போது?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படம் 'மெர்ரி கிறிஸ்மஸ்' விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வந்த இன்னொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக

மணிகண்டனின் அடுத்த படம்.. சூப்பர் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான மணிகண்டன் அடுத்த படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.