முக்கிய விதியை மீறிய மாயா -ஐஷு: இதையாவது கமல்ஹாசன் கேட்பாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அவ்வப்போது சில விதிமுறைகளை மீறுவது என்பது சகஜம் தான். முதல் சீசனிலிருந்து 7வது சீசன் வரை பலமுறை இது நடந்துள்ளது.
ஆனால் முக்கிய விதி என்பது மைக்கை கழட்டி வைத்துவிட்டு ரகசியமாக பேசக்கூடாது என்பதுதான். இதற்கு முன்பு கூட ஒரு சில சீசன்களில் சில போட்டியாளர்கள் மைக்கை கழட்டி ரகசியமாக பேசிய நிலையில் கமல்ஹாசனே கூப்பிட்டு கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று ஐஷு மற்றும் மாயா ஆகிய இருவரும் மைக்கை கழட்டி வெளியே விட்டுவிட்டு டாய்லெட் சென்று ரகசியமாக சில நிமிடங்கள் பேசி விட்டு அதன் பின் வெளியே வந்து மீண்டும் மைக்கை மாட்டிக் கொள்கின்றனர். இது முழுக்க முழுக்க பிக் பாஸ் விதிகளை மீறும் செயல் என்றும் கமல்ஹாசன் இதற்கு கண்டிப்பாக கண்டனம் தெரிவித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்
ஏற்கனவே பலமுறை விதிகளை மீறி உள்ள மாயாவை இந்த வாரம் கமல்ஹாசன் கண்டிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Dear @ikamalhaasan
— Raja 🖤 (@whynotraja) November 10, 2023
FY kind attn.#Maya & #Aishu removed their mic and spoke some secret in the toilet. That’s a serious violation. #BiggBossTamil7 #BiggBossTamil
pic.twitter.com/V2xVUh8iN5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments