அந்த ஒரே ஒரு சம்பவம்.. பிரதீப்பை நம்ப வைத்து கழுத்தறுத்த மாயா.. துரோக வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் 7வது சீசனில் பிரதீப் ஆபத்தானவர் என்று முதலிலேயே கண்டுபிடித்த மாயா அவரை நம்ப வைத்து கழுத்தறுத்து, அவருக்கு துரோகம் செய்து, நயவஞ்சமாக வெளியேற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே பிரதிப்புக்கு அதிகமாக மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஒரு கமல்ஹாசன் எபிசோடில் பிரதீப்புக்கு பார்வையாளர்களின் கைதட்டல் இருந்ததை பார்த்ததும் மாயா இந்த போட்டியாளர் டேஞ்சர் என்பதை புரிந்து கொண்டார்.
இதனை அடுத்து பிரதீப் உடன் நேரடியாக மோத முடியாது என்பதால் அவரை நம்ப வைத்து கழுத்தறுக்க முடிவு செய்தார். அதனால் முதலில் பிரதீப் எனது அண்ணன் என அவர் நாடகமாடினார். தனது சக போட்டியாளர்களிடமும் பிரதீப் எனது அண்ணன் போல என்று நம்ப வைத்தார். பிரதீப்பையும் நம்ப வைத்தார்.
இந்த நிலையில் தான் திடீரென மாயா பிரதீப்புக்கு எதிரான ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது அதை மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார். பிரதீப் மேல் குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்று இவர் தான் கிட்டத்தட்ட அனைவருக்கும் மூளைச்சலவை செய்தார். பிரதீப் பெண்களுக்கு எதிரானவர் என கமலஹாசனையும் நம்பவைத்து, பிரதீப் மீது ரெட் கார்டு காட்ட வைத்து அவரை வெளியேற்றிவிட்டு அந்த வெளியேற்றத்தை அவர் கொண்டாடவும் செய்தார்.
இது குறித்து அனைத்து காட்சிகளும் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையின் மாயாவின் துரோகம் படிப்படியாக எப்படி வளர்ந்தது என்பது இந்த வீடியோவில் உள்ளது. மாயா மீது ஏற்கனவே பார்வையாளர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இந்த வீடியோ அவர் எப்படிப்பட்ட துரோகி என்பதை வெட்ட வெளிச்சமாக்கிவிட்டது.
#Maya hope this video reaches you once you came out!
— violette (@yam4653) January 11, 2024
Such a venomous lady you're
You gonna regret for this in the rest of your life!#BiggBossTamil7 #BiggBoss7tamil #PradeepAntony #PradeepAntony #Pradeep pic.twitter.com/oxwM0fOcKM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com