பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது மாயாவுக்கு கிடைத்த வாய்ப்பு.. இயக்குவது ஹாலிவுட் பிரபலம்..!

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மாயா கிட்டத்தட்ட டைட்டில் பட்டத்தை நெருங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் அவருக்கு தற்போது ஹாலிவுட் பிரபலம் ஒருவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ மற்றும் ’லியோ’ ஆகிய படங்களில் மாயா நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது 100 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்து இருக்கும் மாயா, இன்னும் ஒரு சில நாட்களில் வெளியே வர உள்ளார்.

இந்நிலையில் சமந்தா நடித்த ’யசோதா’, சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ உள்ளிட்ட படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்த யானிக் பென் என்ற ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் தமிழில் இயக்குனர் ஆக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் மாயா தான் முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமந்தா நடித்த ’ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் சீரிஸ், சில ஹாலிவுட் படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணிபுரிந்த இவர் தற்போது மாயா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் படத்தை இயக்குவதாக வெளியான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மாயாவுக்கு ஹாலிவுட் பிரபலத்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.