close
Choose your channels

மே 24ஆம் தேதி வெளியாக இருந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் தடை.. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

Wednesday, May 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை மறுநாள் அதாவது மே 24ஆம் தேதி வெளியாக இருக்கும் படத்தின் டைட்டிலுக்கு திடீரென சென்சார் அனுமதி மறுத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் நாளை மறுநாள் வெளியாக இருந்த படங்களில் ஒன்று ’வடக்கன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’வடக்கன்’டைட்டிலுக்கு தணிக்கை குழு அனுமதி மறுத்துள்ளதாகவும் இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும் விரைவில் படத்தின் புதிய தலைப்பு மற்றும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கன்கள் தமிழர்களின் வேலையை பறித்து விட்டார்கள் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்றும் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்று கூறும் ஒரு நபரின் கதை தான் இந்த ’வடக்கன்’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பாஸ்கர் சக்தி என்பவர் இயக்கி உள்ளார். குங்குமராஜ் முத்துசாமி, வைர மாலா, ரமேஷ் வைத்யா, சமீரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜனனி இசையமைத்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment