மே 24ஆம் தேதி வெளியாக இருந்த படத்தின் டைட்டிலுக்கு சென்சார் தடை.. ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,May 22 2024]

நாளை மறுநாள் அதாவது மே 24ஆம் தேதி வெளியாக இருக்கும் படத்தின் டைட்டிலுக்கு திடீரென சென்சார் அனுமதி மறுத்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் நாளை மறுநாள் வெளியாக இருந்த படங்களில் ஒன்று ’வடக்கன்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் ’வடக்கன்’டைட்டிலுக்கு தணிக்கை குழு அனுமதி மறுத்துள்ளதாகவும் இதன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாகவும் விரைவில் படத்தின் புதிய தலைப்பு மற்றும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கன்கள் தமிழர்களின் வேலையை பறித்து விட்டார்கள் என்றும் அவர்களை கொல்லாமல் விடமாட்டேன் என்றும் அவர்களை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவோம் என்று கூறும் ஒரு நபரின் கதை தான் இந்த ’வடக்கன்’ படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை பாஸ்கர் சக்தி என்பவர் இயக்கி உள்ளார். குங்குமராஜ் முத்துசாமி, வைர மாலா, ரமேஷ் வைத்யா, சமீரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜனனி இசையமைத்துள்ளார்.

 

More News

பிரபல பாடகியின் பயோபிக் திரைப்படம்.. த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா நடிக்க போட்டியா?

பிரபல கர்நாடக சங்கீத மேதை ஒருவரின் பயோபிக் திரைப்படத்தில் நயன்தாரா, த்ரிஷா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர்களில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜெயம் ரவி, துல்கர் சல்மான் விலகியதால் 'தக்லைஃப்' படத்தில் ஏற்பட்ட மாற்றம் .. மாஸ் செய்யும் சிம்பு..!

'தக்லைஃப்' படத்திலிருந்து ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் விலகியதால் மணிரத்னம் வேற லெவலில் ஸ்கிரிப்டில் மாற்றம் செய்துள்ளதாகவும் இந்த மாற்றம் காரணமாக

விஜயகாந்த் பாணியில் ஸ்டண்ட் பயிற்சி செய்த சமந்தா.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ..!

கேப்டன் விஜயகாந்த் பாணியில் நடிகை சமந்தா வேற லெவலில் ஸ்டண்ட் பயிற்சி செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிம்புவின் 'STR48' படத்தில் 2 பாலிவுட் நடிகைகளா? பட்ஜெட் எகிறுமே?

சிம்பு நடிக்க இருக்கும் 48வது படம் குறித்த தகவல்கள் கடந்த ஒரு ஆண்டாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு முன்னணி பாலிவுட் நடிகைகள்

அஜித், விஜய் படங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்..எத்தனை கோடி வித்தியாசம்?

அஜித் மற்றும் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை ஒரே நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த இரு படங்களை வாங்கிய தொகையில் எத்தனை கோடி