விஷாலின் 'இரும்புத்திரை' ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்
- IndiaGlitz, [Monday,April 23 2018]
விஷால், சமந்தா நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் மே மாதம் 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று காலை அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புத்தம் புதிய போஸ்டர்களும் வெளிவந்தது. இதனால் விஷால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்
இந்த நிலையில் இந்த படம் மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்று விஷால் அறிவித்துள்ளார். இந்த படத்தின் விநியோகிஸ்தர்கள், தன்னுடைய நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்காமல் மே 11 ரிலீஸ் தேதி என்று அறிவித்துவிட்டனர் என்றும், தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையே சரியான புரிதல் இல்லாமல் நடந்த குழப்பத்தால் இந்த அறிவிப்பு வெளிவந்துவிட்டதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், தியா, பக்கா மற்றும் பாடம் ஆகிய நான்கு படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்துள்ளது.
அதைபோல் மற்ற திரைப்படங்களின் ரிலீஸ் தேதி குறித்து ஆலோசிக்க வரும் வியாழன் அன்று தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் விநியோகிஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னரே 'இரும்புத்திரை' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.