close
Choose your channels

உழைப்பாளர் தினத்தில் உதித்த உழைப்பாளி: அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Sunday, May 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகம் முழுவதும் இன்று உழைப்பாளர் தினமான மே தினக் கொண்டாட்டம் கொண்டாடி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் மட்டும் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அஜித் பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி வரும் ரசிகர்கள் இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய கொண்டாட்டத்தைக் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் அஜித்தின் பிறந்த நாளுக்கு தங்களது சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் அவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அஜித் அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் மீது எப்போதும் எனது அன்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்த ஆண்டு உங்களுக்கு மிகப்பெரிய ஆண்டாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி, இன்று பிறந்தநாளை கொண்டாடும் அஜித் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் அஜித் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் இந்த ஆண்டு உங்களுக்கு மிகச் சிறந்த ஆண்டாக இருக்கும் என்றும் ’ஏகே 62’ படம் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார் .

மேலும் பல திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அஜித்துக்கு தொடர்ச்சியாக தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment