இந்திய பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், ஐபிஎல் பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேனுமாக இருந்தவரும் தற்போது ஐபிஎல் டெல்லி அணியில் இடம்பெற்றவருமான மாக்ஸ்வல், இந்திய வம்சாவளி பெண் ஒருவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆஸ்திரேலிய வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான வின்இராமன் என்ற மருத்துவத் துறையைச் சேர்ந்த பெண்ணும் மேக்ஸ்வெல்லும் கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாகவும் தற்போது இரண்டு குடும்பத்துடன் சம்மதத்தின் பேரில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் மேக்ஸ்வெல் மற்றும் வின்இராமன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

காயம் காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து விலகி இருக்கும் மேக்ஸ்வெல் விரைவில் அந்த அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டியிலும் மேக்ஸ்வெல் டெல்லி அணியின் சார்பில் விளையாட உள்ளார் என்பதும் இந்த ஆண்டு அவர் அதிரடி ஆட்டத்தின் மூலம் அதிக ரன்களை குவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வம்சாவளி பெண்ணை மணக்க இருக்கும் மேக்ஸ்வெல்லுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

??

A post shared by Glenn Maxwell (@gmaxi_32) on Feb 26, 2020 at 2:40am PST

More News

டெல்லி வன்முறை: பா.ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில், 'குடியுரிமைத் திருத்தச்  சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியவுடன்

ரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஆவணப்படமான 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவண[படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது

ஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி

'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாமி இயக்கியுள்ள அடுத்த படம் 'அக்கா குருவி. இந்த படம் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி

சமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி

சிம்பு த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 வருடங்கள் ஆனதை அடுத்து சிம்பு மற்றும் த்ரிசாவின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

'சபாஷ் ரஜினி'! கமல் வாழ்த்து டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக தாக்கினார் என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம்